இஸ்ரேல்மீது ஏவுகணை மழை பொழியும் ஈரான்: இருவர் பலி!
மத்திய கிழக்கு போர் இன்று 19 ஆவது நாளாக தொடர்கின்றது.
இந்நிலையில் இஸ்ரேல் டெல் அவிவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலால் ரமத் கான் பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையான சேதமடைந்துள்ளன என்றும், அங்கிருந்து புகை மூட்டம் எழுவதாகவும் அவசரக்கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பல கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளதோடு, அப்பகுதி முழுவதும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஈரானின் பதிலடி தாக்குதலில் இஸ்ரேலில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும் அது தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.





