ஈரான் போராட்டம் – 2000 பேர் மரணம் : உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!
ஈரானில் நடந்த போராட்டங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரி ஒருவர் இன்று அறிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களாக நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்று வரும் போராட்டங்களில் இறப்பு தொடர்பான தகவல்களை அதிகாரி ஒருவர் உத்தியோகப்பூர்வமாக பகிர்ந்துகொள்வது இதுவே முதல் முறை.
இருப்பினும் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விரிவான விபரங்களை அவர் வெளியிடவில்லை.
மோசமான பொருளாதார நிலைமைகளால் தூண்டப்பட்ட இந்த அமைதியின்மை, குறைந்தது மூன்று ஆண்டுகளாக ஈரானிய அதிகாரிகளுக்கு மிகப்பெரிய உள் சவாலாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





