இன்றைய முக்கிய செய்திகள்

கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக ஈரானின் Tasnim செய்தியை மேற்கோள் காட்டி அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, “வெற்றி அறிவிப்பு” என்று அழைக்கப்படுகிறது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கட்டாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து பழிவாங்கும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரானின் Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை இடைமறிக்கப்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கட்டார் தெரிவித்துள்ளது.

அல் உதெய்து விமானப்படை தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்ததாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும், “ஆயுதப் படைகளின் விழிப்புணர்வு மற்றும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு” நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கட்டார் வான்வெளி மற்றும் நாடு பாதுகாப்பாக இருப்பதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க அதன் ஆயுதப்படைகள் முழுமையாக தயாராக இருப்பதாகவும் அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதியளித்தது.

MP

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன
error: Content is protected !!