ஈரானில் கடந்த ஆண்டு 900 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் : ஐ.நா
டிசம்பரில் ஒரே வாரத்தில் சுமார் 40 பேர் உட்பட, கடந்த ஆண்டு ஈரானில் 900 க்கும் மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உரிமைகள் தலைவர் தெரிவித்துள்ளார்.
“ஈரானில் ஆண்டுக்கு ஆண்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பதை நாங்கள் காண்கிறோம் என்று தலைவர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
“ஈரான் இந்த மரணதண்டனைகளை தடுக்க வேண்டிய நேரம் இது.” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கொலை, போதைப்பொருள் கடத்தல், கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட முக்கிய குற்றங்களுக்கு ஈரான் மரண தண்டனையை பயன்படுத்துகிறது.
ஈரானில் தூக்கு தண்டனைகள் அதிகரித்து வருவதால் ஆர்வலர்கள் அதிகளவில் அச்சமடைந்துள்ளனர்.





