இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலை மறுக்கும் ஈரான்
இஸ்ரேலின் ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும் இப்போதைக்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்பாஹான் நகரில் உள்ள ராணுவ விமானத் தளத்தில் வெடிகுண்டுச் சத்தம் மூன்று முறை கேட்டதாக ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதற்குமுன் இஸ்ரேலிய ஏவுகணைகள் ஈரானை நேற்று தாக்கியதாக செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இஸ்பாஹானில் உள்ள விமான நிலையத்திலும் வெடிகுண்டுச் சத்தம் கேட்டது என்று ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்தது
அதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இஸ்பாஹானில் பல அணுச்சக்தி நிலையங்கள் உள்ளன. ஈரானிய வான்வெளியில் பறப்பதிலிருந்து பல விமானங்கள் திசை திருப்பப்பட்டன.
சென்ற வாரம் ஈரான் இஸ்ரேலை நோக்கி வானூர்திகளை அனுப்பியது. ஏப்ரல் முதல் தேதி சிரியாவில் உள்ள தெஹ்ரான் (Tehran) தூதரகம் மீது நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் அந்தத் தாக்குதலை நடத்தியது.
ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரப்போவதாக இஸ்ரேல் முன்னதாகக் கூறியிருந்தது.