செய்தி விளையாட்டு

IPL Match 69 – புள்ளிபட்டியலில் முதலிடத்திற்காக போராடும் மும்பை மற்றும் பஞ்சாப்

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை – பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர். தொடக்கம் முதலே ரியான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மந்தமாக விளையாடிய ரோகித் சர்மா 24 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த திலக் வர்மா 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதனையடுத்து பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். ஹர்திக் 26 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் 57 ரன்களுடன் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் தரப்பில் விஜயகுமார், மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி