IPL Match 60 – குஜராத் அணிக்கு 200 ஓட்டங்கள் இலக்கு

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொண்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கியது.
இந்நிலையில், 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.
இதில், அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அசத்தியுள்ளார். மேலும், அபிஷேக் போரல் 30, அக்சர் படேல் 25, த்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 21 ரன்களை எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியுள்ளது.