IPL Match 34 – விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

ஐபிஎல் சீசனின் 34வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் டிம் டேவிட் தனி ஆளாகப் போராடி 26 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பிரியான்ஷ் ஆர்யா 16 ரன்னும், பிரப் சிம்ரன் சிங் 13 ரன்னும், ஷ்ரேயஸ் அய்யர் 7 ரன்னும், ஜோஷ் இங்லீஷ் 14 ரன்னும் எடுத்தனர்.
நேஹல் வதேரா 19 பந்தில் 33 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இறுதியில், பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் பஞ்சாப் அணி பெறும் 5வது வெற்றி இதுவாகும். பெங்களூரு அணி பெற்ற 3வது தோல்வி இதுவாகும்.