IPL Match 15 – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படுதோல்வி

ஐ.பி.எல். தொடரின் 15வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.
வெங்கடேஷ் ஐயர் 29 பந்தில் 60 ரன்னும், ரகுவன்ஷி 32 பந்தில் 50 ரன்னும் குவித்தனர். ரகானே 38 ரன்னும், ரிங்கு சிங் 32 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
கிளாசன் 33 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 27 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ஐதராபாத் 16.4 ஓவரில் 120 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தா சார்பில் வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டும், ஆண்ட்ரூ ரசல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.