IPL Match 13 – இலகுவான வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் அணி

ஐபிஎல் 2025 தொடரின் 13ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
20 ஒவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பூரண் 44 ரன்களும், ஆயுஷ் பதோனி 41 ரன்களும் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்களில் வெளியேறினார்.
பிரப்சிம்ரன் சிங் 69 ரன்கள் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்களும், நேஹால் வதேரா 43 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இறுதியில் பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.