IPL Match 09 – இரண்டாவது தோல்வியை பதிவு செய்த மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
சூர்யகுமார் யாதவ் 28 பந்தில் 48 ரன்னும், திலக் வர்மா 39 ரன்னும் எடுத்து வெளியேறினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மும்பை அணியின் 2வது தோல்வி இதுவாகும்.