IPL Match 04 – டெல்லி அணிக்கு 210 ஓட்டங்கள் இலக்கு

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 2025-ன் 4வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதலில் பேட்டிங் செய்தது.
மார்கிராம் நிதானமாக விளையாட மிட்செல் மார்ஷ் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 64 ரன்கள் குவித்தது.
மிட்செல் மார்ஷ் 21 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இதனால் லக்னோ அணியின் ஸ்கோர் 250 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 11.4 ஒவரில் 133 ரன்கள் குவித்திருந்தது.
ரிஷப் பண்ட் 6 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அப்போது லக்னோவின் ஸ்கோர் 13.4 ஓவரில் 161 ரன்னாக இருந்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் 209 ரன்கள் குவித்தது. மில்லர் 27 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.
டெல்லி அணி சார்பில் ஸ்டார்க் 42 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.