ஐபிஎல் 2025 : கைவிட்ட கொல்கத்தா அணி… கவலையில் வெங்கடேஷ் ஐயர்!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது.
இதற்கிடையில், ஒவ்வொரு அணியில் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியல் வெளியாகி இருந்தது. அதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங் ஆகியோர் தக்க வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் நடந்து முடிந்த சீசனில் அணிக்கு முக்கிய வீரராக இருந்த அல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் பெயர் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது போல அவருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி தான் கோப்பையை வென்றது. இந்த சீசனில் சிறப்பாக 15 போட்டிகளில் 370 ரன்கள் வெங்கடேஷ் ஐயர் எடுத்திருந்தார். எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் அவரை அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை தக்க வைக்கவில்லை. இந்த நிலையில், தன்னை தக்க வைக்காதது குறித்து வெங்கடேஷ் ஐயர் வேதனையுடன் பேசியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” கொல்கத்தா அணி இப்போது ஒரு நல்ல தக்க வைப்பைக் கொண்டுள்ளதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவர்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு ஐந்து நல்ல பேட்ஸ்மேன்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால், என்னுடைய பெயரும் அவர்களுடைய தக்கவைப்பு பட்டியலில் இடம்பெற வேண்டும் என நான் விரும்பினேன்.
ஆனால் அது நடக்கவில்லை என்பது எனக்குச் சற்று ஏமாற்றமாகத் தான் இருக்கிறது. கொல்கத்தா அணிக்காக என்னென்னவெல்லாம் கொடுக்க முடியுமோ அதை அனைத்தையும் நான் கொடுத்திருக்கிறேன். கிரிக்கெட் என்பதையும் தாண்டி கொல்கத்தா என்றால் எனக்கு ஒரு எமோஷனல். இது ஒரு குடும்பம் என்னுடைய பெயர் தக்கவைப்பு பட்டியலில் இல்லை என்றால் அதனை நினைக்கும் போது கண்ணீரை ஏற்படுத்துகிறது.
இது எப்படி எப்படி நடக்கிறது என்பது இதன் மூலம் நான் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டேன். அதை நேரத்தில் கொல்கத்தா தக்க வைப்பை மிகவும் அருமையாக எடுத்தது நினைத்து மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் ” என வேதனையுடன் வெங்கடேஷ் ஐயர் பேசியுள்ளார்.