Phoneஇல் பாதுகாப்புக் குறைபாடு – பயனாளர்களுக்கு விசேட அறிவிப்பு
iPhoneகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை Apple நிறுவனம் உறுதி செய்துள்ளது. iOS 16.6.1, iPadOS 16.6.1 ஆகிய புதிய பாதுகாப்புப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது.
அந்தப் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து முதலில் Citizen Lab கண்காணிப்பு அமைப்பு தகவல் வெளியிட்டது.
இஸ்ரேலின் NSO நிறுவனத்தின் Pegasus வேவு மென்பொருளைக் கொண்டு iPhoneகளை ஊடுருவ அந்தக் குறைபாடு வழிவகுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
iOS 16.6 பதிவிறக்கம் செய்யப்பட்ட iPhoneகளில் அந்தப் பாதுகாப்புக் குறைபாடு கண்டறியப்பட்டது.
புதிய பதிப்பு அதைச் சீர்செய்துவிடும். iPhone பயனீட்டாளர்கள் புதிய பதிப்பைப் பதிவிறக்கம் செய்யுமாறு Citizen Lab அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)