UKவில் பொது இடங்களில் புற்றுநோயை உண்டாக்கும் கண்ணுக்கு புலப்படாத இரசாயனம் கண்டுப்பிடிப்பு!
இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பூங்காக்களில் புற்றுநோய் மற்றும் பிற கடுமையான உடல்நலக் கோளாறுகளுடன் தொடர்புடைய களைக்கொல்லியான கிளைபோசேட்டின் (glyphosate) எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் பூச்சிக்கொல்லி நடவடிக்கை வலையமைப்பு (PAN UK) முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 13 விளையாட்டு பூங்காக்களில் சுமார் 08 பூங்காக்களில் கிளைபோசேட்டின் களைக்கொல்லியுடன் தொடர்புடைய எச்சங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
பொது இடங்களில் வளரும் களைகளை அகற்றுவதற்கு இங்கிலாந்து கவுன்சில்கள் கிளைபோசேட்டினை (glyphosate) பரவலாக பயன்படுத்துகின்றனர். இதன்காரணமாக இந்த எச்சங்கள் வியாபித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு பிரச்சாரகர்கள் அனைத்து இங்கிலாந்து கவுன்சில்களையும் வலியுறுத்துகின்றனர்.
அத்துடன் மேற்படி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிளைபோசைட்டை (glyphosate) தடை செய்யக் கோரியும் அழைப்பு விடுத்துள்ளனர்.





