இந்திய டெக் துறையில் முதலீடு- குழப்பத்தில் முதலீட்டாளர்கள்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services [TCS]) மற்றும் HCL போன்ற முன்னணி ஐடி நிறுவனங்கள் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் இந்திய டெக் துறையில் முதலீடு செய்யலாமா என்ற குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 10 வருடத்தில் இந்திய ஐடி சேவை துறை முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
2000-2010 காலத்தில் உலகளவில் இணையதள பயன்பாடு பெருக, அமெரிக்க நிறுவனங்கள் செலவைக் குறைக்கும் வழியாக இந்திய டெக் வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்தின.
இந்தியாவில் குறைந்த சம்பள செலவு காரணமாக, டெக் வேலைவாய்ப்புகள் அதிகம் உருவானது, நாட்டில் நுகர்வு வளர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு முதல் AI மற்றும் ஆட்டோமேஷன் புதிய சுழற்சியை தொடங்கியது. அமெரிக்கா மற்றும் சீனாவில் AI துறையில் பெரும் முதலீடு நடக்கிறது.
மெட்டா (Meta) நிறுவனம் 2026–2028 காலத்தில் AI க்கு 600 பில்லியன் டொலர் செலவிட திட்டமிடுகிறது.
இந்திய டெக் நிறுவனங்களும் அடுத்த சுழற்சியில் நன்மை பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தையை கவனித்து, சரியான நேரத்தில் முதலீடு செய்யுமாறு நிபுணர்கள் கூறுகின்றனர்.





