பதவி விலகிய ஜப்பானின் முன்னாள் ஆளுநர் குறித்து விசாரணையில் வெளிவந்த தகவல்கள்
பாலியல் துன்புறுத்தல் காரணமாக மத்திய ஜப்பானில்(Japan) முன்னாள் ஆளுநர் ஒருவர், ஊழியர்களுக்கு சுமார் 1,000 பாலியல் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக வழக்கறிஞர்களின் விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய ஜப்பானில் உள்ள ஃபுகுய்(Fukui) மாகாணத்தின் ஆளுநராக இரண்டாவது முறையாக பதவியேற்ற 63 வயதான டாட்சுஜி சுகிமோட்டோ(Tatsuji Sugimoto) பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பதவி விலகலை தொடர்ந்து நடந்த விசாரணையில் “பாலியல் துன்புறுத்தலை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உள்ளது” என்று வழக்கறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், பல பெண் ஊழியர்களுடன் பாலியல் உறவு கொள்ள சுகிமோட்டோ முயன்று அவர்களின் உடல் தோற்றம் குறித்து கருத்து தெரிவித்த செய்திகளும் அந்த குறுஞ்செய்திகளில் அடங்கும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முன்னோடிகளில் ஒருவரான சுகிமோட்டோ, 2004ம் ஆண்டு ஃபுகுய் மாகாண அரசாங்கத்தில் பொது விவகாரத் துறையின் தலைவராகவும் 2013ல் துணை ஆளுநராகவும் பணியாற்றி, ஃபுகுய் மாகாணத்தில் அவ்வப்போது பதவிகளை வகித்தார்.





