மக்களை தூங்க வைக்கும் செயலி அறிமுகம்!
மக்களை தூங்கவைக்க உதவும் ஒரு செயலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிரபலமான மிகைமெய்நிகர் செயலி Pokemon Go-வில் விளையாடிய அனைவரும் Pokemon கதாபாத்திரங்களைப் ‘பிடிப்பதில்’ கிடைக்கும் திருப்தியை அறிவார்கள்.
அத்தகைய ரசிகர்களைத் தூங்கவைக்க உதவும் ஒரு செயலியே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
‘Pokemon Sleep’ எனும் செயலியை Pokemon Co, Niantic ஆகிய நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.
‘கதாபாத்திரங்களைப் பார்க்கவேண்டுமென்றால் தூங்கவேண்டும்’ என்ற கருப்பொருளைக் கொண்டு செயலி அமைந்துள்ளது.
ரசிகர்கள் தூங்கும்போது செயலி அவர்களின் உறக்கத்தைக் கண்காணிக்கும். அவர்கள் விழித்துக்கொண்ட பிறகு செயலியில் Pokemon கதாபாத்திரங்கள் தோன்றும்.
ரசிகர்களின் தூக்கம் எந்த அளவிற்கு ஆழமாக இருந்ததோ அதற்கு ஏற்றவாறு கூடுதலான கதாபாத்திரங்கள் தோன்றும். மக்கள் தேவையான அளவில் ஓய்வைப் பெறுவதற்குச் செயலி உதவும் என்று Pokemon Co நிறுவனம் நம்புகிறது.