ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு உகாண்டாவில் இணைய சேவை துண்டிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உகாண்டா(Uganda) அதிகாரிகள் நாடு தழுவிய இணைய முடக்கத்தை விதித்துள்ளனர்.
இணையத்தில் தவறான தகவல், தேர்தல் மோசடி மற்றும் வன்முறையைத் தூண்டுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதய ஜனாதிபதியான யோவேரி முசேவேனி(Yoweri Museveni), 2021ம் ஆண்டு நடந்த கடைசித் தேர்தலில் 58% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
குறித்த தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நடந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்தனர். மேலும், இணைய சேவை ஒரு வாரத்திற்கு துண்டிக்கப்பட்டது.





