சர்வதேச ரீதியில் தங்கத்தின் விலை 1.8 சதவீதத்தால் அதிகரிப்பு!
வெனிசுலா மீது ட்ரம்ப் முன்னெடுத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தொடர்ந்து உலகளாவிய ரீதியில் விலைமதிப்பற்ற உலோகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
இது புவிசார் அரசியல் அபாயங்கள் குறித்த முதலீட்டாளர்களின் கவலைகளை அதிகரித்துள்ளது.
இன்படி ஆசியாவில் இன்றைய தினம் தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலை சுமார் 1.8 சதவீதத்தால் உயர்ந்து $4,408 (£3,282) ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் வெள்ளி 3.5 சதவீதத்தால் உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், கச்சா எண்ணெய் விலைகள் சிறிய அளவில் மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





