வட்டி விகிதங்கள்: மத்திய வங்கி ஆளுநர் வங்கிகளுக்கு எச்சரிக்கை
கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில், அதற்கேற்ப வட்டி விகிதங்களைக் குறைக்கத் தவறும் வங்கிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாலிசி வட்டி விகிதங்கள் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, தற்போதைய பாலிசி வட்டி விகிதங்கள் வைப்புத்தொகைக்கு 11 சதவீதமாகவும், கடன் வழங்குவதற்கு 12 சதவீதமாகவும் உள்ளன.
மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜூன் மாதக் கொள்கை வீதக் குறைப்பு மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஏனைய சாதகமான அபிவிருத்திகளின் விளைவாக சராசரி கடன் வீதம் 29 வீதத்திலிருந்து அண்ணளவாக 20 வீதமாக குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.





