உத்தேசத் தரவு அத்துமீறல்; UN விமானப் போக்குவரத்து நிறுவனம் விசாரணை
ஐக்கிய நாடுகள் பொது விமானப் போக்குவரவு அமைப்பு ஒன்று உத்தேசத் தகவல் பாதுகாப்புச் சம்பவம் குறித்து வெளியான தகவல்களின் தொடர்பில் விசாரணை மேற்கொள்கிறது.
தனது பதிவுகளில் பத்தாயிரக்கணக்கானவைத் திருடப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அந்த விசாரணை நடைபெறுவதாக அமைப்பு கூறியது.
அந்த உத்தேசப் பாதுகாப்பு அத்துமீறல் நடவடிக்கை, அனைத்துலக அமைப்புகளைக் குறிவைக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவர்களுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்று கனடாவில் தளம் கொண்டுள்ள அனைத்துலகப் பொதுப் போக்குவரவு அமைப்பு தனது இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.
கடந்த ஜனவரி 6ஆம் திகதி அமைப்பிடமிருந்து 42,000 பதிவுகள் திருடப்பட்டுவிட்டதாக ஊடுருவிகள் தளம் ஒன்றில் வெளியான தகவலின் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதை அமைப்பு, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியது. அது பற்றி மேல் விவரங்களை அது வெளியிடவில்லை.
“விசாரணையின் இந்தத் தொடக்கக் கட்டத்தில், எங்களால் சம்பவம் குறித்து கூடுதல் விவரங்களையோ சம்பந்தப்பட்ட தரவுகள் பற்றி குறிப்பிட்ட தகவல்களையோ வழங்கமுடியாது,” என்று அமைப்பு கூறியது.
193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள அந்த அமைப்பு, 2016ஆம் ஆண்டில் நடந்த ஊடுருவல் நடவடிக்கையில் குறிவைக்கப்பட்டது. அதன் பிறகு, தனது பாதுகாப்பிற்குக் கணிசமான மேம்பாடுகளைச் செய்தததாக அது தெரிவித்தது.