மனதை பாதிக்க வைக்கும் தூக்கமின்மை!
நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தூக்கமின்மை தான் காரணமாக இருக்கின்றது. சரிவர தூக்கமின்மை என்பது உடல்நிலை மட்டுமல்லாமல் மனநிலையையும் பாதிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.
உடல் மனம் இரண்டும் ஒன்றோடு ஒன்று நிறுத்திய தொடர்பு கொண்டது. உடல் பாதிக்கப்பட்டால் மனம் பாதிக்கப்படும். அதுபோல மனநிலையும் பாதிக்கப்படும்.
இவற்றை இரண்டையும் சரி வர காப்பாற்றிக்கொள்ள நமக்கு நல்ல தூக்கம் அவசியம். அந்த தூக்கத்தை பெற கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
தூங்குவதற்கு முன்னதாக ஒரு டம்ளர் பால் அருந்தினால் நன்றாக உறக்கம் வரும்
சுடு தண்ணீரில் குளித்தால் நன்றாக உறக்கம் நன்றாக வரும் .
நம்முடைய பாதத்தை தேய்த்து கொடுப்பதன் மூலம் நல்ல தூக்கத்தை பெறலாம்.
தூங்கச் செல்வதற்கு முன்னதாக காபி டீ அருந்துவதை தவிர்க்கலாம்.
ஆல்கஹாலை உட்கொள்வது தூக்கத்தை கெடுக்கும் என்பதால் ஆல்கஹால் எடுப்பதை தவிர்க்கவும்.
படுக்கை அறையில் எப்போதும் உறங்குவதற்கான சூழலை ஏற்படுத்தி சுத்தமாக பராமரிக்க வேண்டும்..