ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதல்கள் குறித்த சேத விபர பதிவேட்டை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தல்!
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்ட கொடூர தாக்குதல்கள், இழப்புகள் குறித்த சேத விபர பதிவேடு, ஐரோப்பிய கவுன்சில் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய முதல் சட்டப்பூர்வ முடிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
ஐஸ்லாந்தில் கவுன்சில் உறுப்பினர்களின் கூட்டத்தில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட், மாஸ்கோ செய்வது “மனசாட்சிக்கு விரோதமானது” என்றும் அது “பொறுப்புக் கூற வேண்டும்” என்றும் கூறினார்.
ரஷ்யா பதிவேட்டை அங்கீகரிக்க வாய்ப்பில்லை என்று அவர் ஒப்புக்கொண்டாலும், மேற்கு நாடுகள் அதன் நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்கான “செயல்முறையைத் தொடங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)