லெபனானில் இலங்கை படைவீரர்கள் இருவர் காயமடைந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் – இஸ்ரேல் உறுதி
லெபனானில் இரண்டு இலங்கையர்கள் காயமடைந்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளதாக டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு லெபனானில் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் பணியாற்றிய இரண்டு இலங்கை அமைதி காக்கும் படையினர் அண்மையில் காயமடைந்தமை தொடர்பில் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தூதர் ஹகாய் டிகான் கவலை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய அரசாங்கம் சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அது கிடைக்கப்பெறும் போது மேலதிக தகவல்களை வழங்குவதாகவும் தூதுவர் டிகான் வலியுறுத்தினார்.





