இலங்கையில் முழுவதும் 50 ஆயிரம் போலி வைத்தியர்கள் சேவையில் உள்ளதாக தகவல்!
நாடு முழுவதும் சுமார் 50,000 போலி மருத்துவர்கள் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை ஒழுங்குபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
அங்கு பேசிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் டாக்டர் பிரசாத் ஹேரத், ஒவ்வொரு நகரத்தின் முக்கிய கிராமங்களிலும் தோராயமாக மூன்று முதல் நான்கு போலி வைத்தியர்கள் உள்ளனர்.
சில மருந்துக் கடைகளின் செயற்பாடுகள் சுகாதாரத் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதால் நோயாளிகள் உயிரிழக்க கூட வாய்ப்புள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக முறையான ஒழுங்குமுறை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் வலியுறுத்துகிறது.