VAT வரி அறவிடு தொடர்பில் வெளியான தகவல்
குழந்தைகளுக்கான போஷாக்கு உணவு, உரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகியவற்றுக்கு VAT வரியை அறவிடுவதற்கு நிதியமைச்சு எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அரசாங்க நிதிக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ஹர்ஷ டி சில்வா இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த அத்தியாவசிய பொருட்களுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்குமாறு தனது குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)