ஆஸ்திரேலியாவில் விசாவுக்கு விண்ணப்பித்த அகதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல்
ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்கான விசா விண்ணப்பங்கள் நீண்ட கால தாமதத்திற்கு விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த தவறான தகவல்களே காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது.
இவ்வாறான விண்ணப்பங்களில் சுமார் 90 வீதமானவர்கள் இந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு தகுதியற்றவர்கள் என தெரியவந்துள்ளது.
ஆனால் இவ்வாறானவர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு சுமார் 11 வருடங்கள் இந்த நாட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விண்ணப்பத் தாமதங்களின் மிகப் பெரிய அநீதியானது உண்மையான அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
தவறான தகவல்களைக் கொண்ட விண்ணப்பங்களை அடையாளம் காண்பது உட்பட குடியேற்ற அமைப்பில் பாரிய மாற்றங்களுக்கு 160 மில்லியன் டொலர் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)