தொலைப்பேசி வழி வந்த தகவல் – சென்னையில் இருந்து இலங்கை வந்த விமானத்தை சோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள்!

இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காஷ்மீரில் உள்ள பஹேல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆறு பயங்கரவாதிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய காஷ்மீரில் பஹேல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு குழு, சம்பந்தப்பட்ட விமானத்தில் வந்ததாக வந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் இது செய்யப்பட்டது.
இன்று (03) காலை 11.59 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த UL 122 விமானம், விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், கேள்விக்குரிய விமானத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரும் நாட்டிற்குள் வந்ததாக எந்த தகவலும் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.