ஜெர்மனியில் வாகனம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனி நாட்டில் வாகனங்கள் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
ஜெர்மனியில் வாகனங்கள் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜெர்மனியின் புள்ளி விபர திணைகளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 1000 பேர் வாழுகின்ற ஒரு பிரதேசத்தில் ஆக குறைந்தது 583 வாகனங்களை வைத்து இருக்கின்றார்கள் என்றும் இந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரைலான்றான்ஸ் மாநிலத்தில் 1000 பேர் உள்ள இடத்தில் 634 பேர் வாகனங்களை வைத்து இருப்பதாகவும்,
சாலபுருக்கன் மாநிலத்தில் 660 பேர் வாகனங்களை வைத்து இருக்கின்றார்கள் என்றும் இந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயண் மாநிலத்திலும் 1000 பேர் வரை வசிக்கின்ற இடத்தில் 625 பேர் வாகனத்தை வைத்து இருப்பதாகவும்,
மேலும் பேர்ளின் மாநிலத்தில் மட்டும் இவ்வாறு 1000 பேருடன் ஒப்பிடும் பொழுது அங்கே வாகனம் வைத்திருப்பவர்களுடைய எண்ணிக்கையானது 338 ஆக உள்ளதாகவும்,
பிரேமன் மாநிலத்தில் 1000 பேருக்கு 443 பேர் வாகனத்தை வைத்து இருப்பதாகவும் இந்த புள்ளி விபரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.