அலெக்ஸி நவால்னியின் இறுதிச் சடங்கு தொடர்பில் வெளியான தகவல்!

தொலைதூர ஆர்க்டிக் தண்டனைக் காலனியில் இந்த மாத தொடக்கத்தில் இறந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் இறுதிச் சடங்கு மார்ச் ஒன்று அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவின் தென்கிழக்கு மேரினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெறும் என்று கிரா யர்மிஷ் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில் உள்ள தண்டனை காலனியில் தன்னுடைய 47 ஆவது வயதில் அலக்ஸி நவால்னி உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நீடித்து வருகின்ற நிலையில்இ இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கத்தேய நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)