இங்கிலாந்தின் ஆபத்தான நபர் தொடர்பில் வெளியான தகவல்!
இங்கிலாந்தில் பாலியல் பலாத்காரம் செய்தமைக்காக தேடப்படும் “மிகவும் ஆபத்தான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இரண்டு முறை பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வாரம் அவர் ஸ்பெயினில் அமைந்துள்ள தனது முடி திருத்தும் கடையை திறக்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றவாளி இப்போது ஸ்காட்லாந்திற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கிறார். அங்கு அவர் கொடூரமான செயல்களைச் செய்ததாக நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என வழக்குறைஞர்கள் தெரிவித்துள்ளனர்.





