இலங்கை

யாழ் – கல்லுண்டாய் பகுதி விபத்து தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் நடைபெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பான செய்திகள் என தெரியவந்துள்ளது.

“யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வைத்தியரும் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில இணையத்தள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில்,  குறித்த செய்தி தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் , யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட தரப்பினரிடம் கேட்ட போது , அவ்வாறான விபத்து சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செய்தியினை எவரேனும் உள்நோக்கம் கருதி வெளியிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!