வட அமெரிக்கா

அதிபர் ஜோ பைடன் உடல்நலம் குறித்து வெளியான தகவல்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உடல்நலம் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (81) தனது வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டார்.”வால்டர் ரீட் நேஷனல் மிலிட்டரி மெடிக்கல் சென்டர்” எனும் மருத்துவ மையத்தில் ஜோ பைடனுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.

இந்நிலையில் அதில் அவரது பிரத்யேக மருத்துவரான Dr. Kevin O’Connor தனது குறிப்பை இணைத்துள்ளார். அந்த குறிப்பில், “ஜோ பைடன் பூரண உடல்நலத்துடன் உள்ளார்.

அவரால் அவரது அனைத்து கடமைகளையும் எந்த சிக்கலோ, விதிவிலக்குகளோ அல்லது சிறப்பான உதவிகளோ இன்றி தானாகவே வழக்கமான முறையில் செய்ய முடியும். நரம்பு மண்டலம் அல்லது நினைவாற்றலை பாதிக்கும் நோய்கள் ஏதும் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை.ஓய்விலும், செயலாற்றும் போதும் அவருக்கு எந்த விதமான உடல் நடுக்கங்களும் இல்லை” என மருத்துவர் கெவின் பதிவிட்டுள்ளார்.

அதேசமயம் தனது மருத்துவ பரிசோதனை முடிந்ததும் ஜோ பைடன்,”நான் மிகவும் இளமையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்ற வருடத்தை விட ஏதும் மாறி விடவில்லை. அனைத்தும் சிறப்பாக உள்ளது” என தெரிவித்தார்.

ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர்களுக்கு நடக்கும் மருத்துவ பரிசோதனைகளுடன் அவர்களது மருத்துவர்கள் தரும் குறிப்பை பொதுவெளியில் அறிக்கையாக தருவது அமெரிக்க வெள்ளை மாளிகையால் நீண்டகாலமாக கடைபிடிக்கப்படும் ஒரு மரபாகும்.இந்நிலையில் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வயதான அதிபர் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!