பிரான்ஸில் விற்கப்படும் சிகரெட் தொடர்பில் வெளிவந்த தகவல்
பிரான்ஸில் விற்கப்படும் சிகரெட் பெட்டிகளில் கிட்டத்தட்ட 40 சதவீதமானவை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதாக தெரியவந்துள்ளது.
ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டிலேயே இந்த சட்டவிரோத விற்பனை பதிவாகியுள்ளது. Tabaco நிலையங்களிலோ, அல்லது அனுமதிக்கப்பட்ட முகவர்களிடமோ சிகரெட் பெட்டிகள் வாங்காமல், கடத்தல்காரர்களிடம், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டவர்களிடமும் இருந்து அவை பெறப்பட்டுள்ளது.
இதனால் பாரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸில் கிட்டத்தட்ட 12 மில்லியன் பேர் புகைப்பிடிக்கின்றனர்.
ஆனால் அதற்குரிய வருமானம் பெறப்படவில்லை. சிகரெட் பெட்டிகளின் விலையேற்றமும் இந்த சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு துணைபோகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)





