சீனாவில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை ; தலைவர்கள் கைது
“சீனாவில் அரசு அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது.
செங்டூ (Chengdu) நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ (Early Rain) தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், அதன் தற்போதைய தலைவர் லி யிங்சியாங் (Li Yingqiang) உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், ‘சீனாவின் எருசலேம்’ என்று அழைக்கப்படும் வென்சூ (Wenzhou) நகரில், பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் ‘யாயாங்’ (Yayang) தேவாலயக் கட்டிடம் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்பட்டது.
மத நடைமுறைகளை அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாகவே போதகர்கள் மற்றும் திருச்சபை உறுப்பினர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.





