பெப்ரவரி மாதத்தில் பணவீக்கம் சரிவு
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் படி பெப்ரவரி மாதத்தில் பணவீக்கம் குறைந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் படி கடந்த ஜனவரி மாதம் 2.4 வீதமாக பதிவான பணவீக்கம் பெப்ரவரி மாத்தில் 1.6 வீதமாகக் குறைந்துள்ளது.
இதனிடையே, இந்த ஆண்டு ஜனவரியில் 3.4 வீதமாக காணப்பட்ட உணவுப் பணவீக்கம், பெப்ரவரி மாதத்தில் 1.1 வீதமாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், ஜனவரியில் 1.6 வீதமாகப் பதிவான உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம், பெப்ரவரி மாத்தில் 1.9 வீதமாக அதிகரித்துள்ளது.




