INDvsWI Test – இரண்டாம் நாள் முடிவில் 140 ஓட்டங்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணி

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
நாணய சுழற்சியை வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 318 ஓட்டங்கள் பெற்றிருந்தது. ஜெய்ஸ்வால் 173 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இன்றைய இரண்டாம் நாளில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175 ஓட்டங்களும், கில் 129 ஓட்டங்களும் பெற்றனர்.
இதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கி சிறப்பாக விளையாடியது. இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் பெற்றுள்ளனர்.