INDvsWI Test – முதல் நாள் முடிவில் 318 ஓட்டங்கள் குவித்த இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று ஆரம்பமானது.
நாணய சுழற்சியை வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தார்.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.
ராகுல் 38 ஓட்டங்களுக்கும் தமிழக வீரர் சாய் சுதர்சன் 87 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 173 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்கள் குவித்துள்ளது.