INDvsENG – முதல் நாள் முடிவில் 264 ஓட்டங்கள் குவித்த இந்தியா

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது.
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
ஜெய்ஸ்வால்- கே.எல். ராகுல் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. இந்திய அணியின் ஸ்கோர் 94 ரன்னாக இருக்கும்போது கே.எல். ராகுல் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். மற்றொரு முனையில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து, 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.
4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். 61 ரன்ங்களில் அவரும் ஆட்டம் இழந்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.
ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூரும் தலா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறும்.