உலகம்

சிறையில் உள்ள இரு பிரிட்டிஷ் குடிமக்களை திருப்பி அனுப்பும் இந்தோனேசியா

சிறையில் இருக்கும் பிரிட்டி‌‌ஷ் குடிமக்கள் இருவரைத் தாயகத்திற்குத் திருப்பியனுப்ப இந்தோனேசியா இணங்கியுள்ளது.

அதற்கான உடன்பாட்டில் ஜகார்த்தாவும்(Jakarta) லண்டனும் இன்று (21) கையெழுத்திட்டன. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட லின்சே சேண்டிஃபோர்டும்(Lindsay Sandiford) அவர்களில் ஒருவர் என்று இந்தோனேசியாவின் மூத்த சட்ட, மனித உரிமை அமைச்சர் யுஸ்ரில் இஹ்ஸா மகேந்திரா(Yusril Ihsa Mahendra) கூறினார்.

கிட்டத்தட்ட 70 வயது மதிக்கத்தக்க லின்சே சேண்டிஃபோர்டுக்கு போதைப்பொருள் கடத்தலுக்காக 2013ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தோனீசியாவின் பாலி தீவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2012ல் தாய்லாந்திலிருந்து பாலிக்கு விமானத்தில் வந்த சேண்டிஃபோர்டின் பயணப்பெட்டியின் கீழ்ப்பகுதியில் இருந்து 2.14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளைச் சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட சேண்டிஃபோர்ட், போதைப்பொருள் கும்பலொன்று அவரது மகனைக் கொல்லப்போவதாக மிரட்டியதைத் தொடர்ந்து அதைக் கடத்த இணங்கியதாகச் சொன்னார்.

சேண்டிஃபோர்டுடன் பிரிட்டனுக்குத் திருப்பி அனுப்பப்படும் இன்னொருவர் போதைப்பொருள் குற்றங்களுக்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 35 வயது ‌ஷஹாட் ‌ஷஹாபாடி. 2014ல் அவர் கைதானார்.

கைதிகள் இருவரும் கடும் மருத்துவப் பிரச்சினைகளால் அவதியுறுகின்றனர்.

(Visited 4 times, 4 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்