உலகம் செய்தி முக்கிய செய்திகள்

எலான் மஸ்க்கின் க்ரோக்(Grok) தொழில்நுட்பத்தை இடைநிறுத்திய இந்தோனேசியா

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் ஆபாச உள்ளடக்கம் குறித்த கவலைகள் காரணமாக, இந்தோனேசியா(Indonesia) எலான் மஸ்க்கின்(Elon Musk) க்ரோக்கை(Grok) இடைநீக்கம் செய்ததாக நாட்டின் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் .

க்ரோக்கின் பட உருவாக்க அம்சம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்த பயனர்களை அனுமதித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்திற்கான அனைத்து அணுகலையும் மறுத்த முதல் நாடு இந்தோனேசியா ஆகும்.

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலி ஆபாச உள்ளடக்கத்தின் அபாயங்களிலிருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் க்ரோக் பயன்பாட்டை இடைநிறுத்தியுள்ளது” என்று அமைச்சர் மியூத்யா ஹஃபித்(Meutya Hafid) ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக க்ரோக் குறித்து பிரித்தானிய(Brittain) அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

க்ரோக் ஏஐ (Grok AI ) விவகாரம்: மஸ்க்கிற்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை!

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!