கனேடிய குடிமக்களுக்கு விசா வழங்குவதில் இந்தியாவின் கவனம்
கனடாவில் உள்ள தனது தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டால், கனேடிய குடிமக்களுக்கு விசா வழங்குவதை மீண்டும் தொடங்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கனடாவில் தனது பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி, இந்தியா செப்டம்பரில் கனேடிய குடிமக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது.
செப்டம்பரில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது நாட்டில் ஒரு சீக்கியத் தலைவர் கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசிற்கும் தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக அறிவித்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமாகின.
இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா கடுமையாக நிராகரித்ததுடன், தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம், கனடாவின் வெளியுறவு அமைச்சர், 41 இராஜதந்திரிகள் இந்தியாவை விட்டு வெளியேறியதாகக் கூறினார்.
இந்தியா தனது ஊழியர்களைத் திரும்பப் பெறுமாறு கனடாவைக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கனேடிய அதிகாரிகள் இதை ‘உள்ளார்ந்த சட்ட மீறல்’ என்று அழைக்கிறார்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.