இந்தியா செய்தி

கலிபோர்னியாவில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்கள்!

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம், கலிபோர்னியாவின் சான் மேடியோவில் உள்ள அவர்களது வீட்டில் இறந்த நிலையில் காணப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனந்த் சுஜித் ஹென்றி (42), அவரது மனைவி ஆலிஸ் பிரியங்கா (40), மற்றும் இவர்களது இரட்டை குழந்தைகள் நோவா மற்றும் நெய்தன் (4) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பலியானவர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்ததாகவும், மற்ற இருவரின் மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் இறப்பிற்கு சிறிது காலத்திற்கு முன்னர் குமட்டல் மற்றும் தலைவலி ஏற்பட்டதாக கூறியுள்ளனர். இதனால்  ஏர் கண்டிஷனர் அல்லது ஹீட்டரில் இருந்து கார்பன் மோனாக்சைடு விஷத்தால் மரணம் ஏற்பட்டதாக குடும்பத்தின் உறவினர்கள் முதலில் சந்தேகித்துள்ளனர்.

இருப்பினும், வீட்டில் எரிவாயு கசிவு அல்லது சாதனங்கள் பழுதடைந்ததற்கான எந்த ஆதாரமும் போலீசாரால் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 29 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!