இந்திய அணி சாதனை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி, முக்கிய சில சாதனைகளையும் படைத்துள்ளது.
5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர்பில் முதல் மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.
மூன்றாவது ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது.
இதற்கமைய இரு நாட்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 9-வது தொடர் இதுவாகும். பாகிஸ்தான் முதலிடத்தில் (10 தொடர் வெற்றி) உள்ளது.
இரு நாட்டு தொடருடன், 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையையும் சேர்த்தால் இந்திய அணி தொடர்ச்சியாக தனதாக்கிய 11-வது தொடராக இது அமையும்.
154 ஓட்டங்கள் இலக்கை இந்திய அணி 60 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்துள்ளது.
முழு உறுப்பினர் நாடுகள் இடையே நடந்த டி20 கிரிக்கெட்டில் 150 ஓட்டங்களுக்கு மேலான இலக்கை 10 ஓவர்கள் மீதம் வைத்து எட்டிப்பிடித்த முதல் அணி இந்தியாவாகும்.
டி 20 உலக்கிண்ண தொடர் அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவின் அதிரடி ஆட்டமானது அவ்வணி உலகக்கிண்ணத்தை வெல்லும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.





