அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவி
அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் கார் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
பலியானவர் 26 வயதான நாக ஸ்ரீ வந்தனா பரிமளா என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மெம்பிஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் (MS) பட்டப்படிப்பைப் படித்து வருவதாக கூறப்படுகிறது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் தொழிலதிபரின் மகளான பரிமளா 2022 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட பவன் மற்றும் நிகித் ஆகிய இரு மாணவர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.