இந்திய பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினாவிற்கு விஜயம்

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
தற்போதுள்ள ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்யவும், முக்கியமான துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவும் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மாலை (உள்ளூர் நேரப்படி) எஸீசா சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கினார், அங்கு அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
57 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அர்ஜென்டினாவுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். முன்னதாக 2018 ஆம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோடி அங்கு விஜயம் செய்திருந்தார்.
(Visited 1 times, 1 visits today)