5 வருடங்களுக்கு பிறகு சீனா செல்லும் இந்திய பிரதமர் மோடி

2020ம் ஆண்டு இந்திய சீன வீரர்கள் மோதிக்கொண்ட கல்வான் மோதலுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
SCO உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வரும் இந்தியப் பிரதமரை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பேசுகையில், “இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனா தியான்ஜினில் SCO உச்சிமாநாட்டை நடத்தும். SCO தியான்ஜின் உச்சிமாநாட்டிற்காக சீனா, பிரதமர் மோடியை வரவேற்கிறது.
அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியுடன், தியான்ஜின் உச்சிமாநாடு ஒற்றுமை, நட்பு மற்றும் பலனளிக்கும் முடிவுகளின் சங்கமமாக இருக்கும்.
SCO அதிக ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் உயர்தர வளர்ச்சியின் புதிய கட்டத்தில் நுழையும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தை சீனா விமர்சித்தது. “நம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு 1 அங்குலம் இடம் கொடுத்தால் அவர்கள் 1 மைல் தூரம் செல்வார்கள்” என இந்தியாவுக்கான சீன தூதர் Xu Feihong தெரிவித்திருந்தார்.