உலகம் செய்தி

அமெரிக்காவில் குற்ற செயல்களில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி தம்பதியினர் கைது

அமெரிக்காவின்(America) வர்ஜீனியாவில்(Virginia), இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் மூன்று பேர் போதைப்பொருள், பாலியல் கடத்தல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு வர்ஜீனியாவில் உள்ள ஃபெடரல் வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, 52 வயதான கோஷா சர்மா(Gosha Sharma) மற்றும் 55 வயதான தருண் சர்மா(Tarun Sharma) ஆகியோர் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

பல ரகசிய நடவடிக்கைகளுக்குப் பிறகு, அவர்களது இடத்தில் கூட்டாட்சி மற்றும் உள்ளூர் முகவர்கள் சோதனை நடத்திய பின்னர் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும், இவர்களுடன் குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக 51 வயதான மார்கோ பியர்ஸ்(Marco Pierce), 40 வயதான ஜோசுவா ரெடிக்(Joshua Redick) மற்றும் 33 வயதான ரஷார்ட் ஸ்மித்(Rashard Smith) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!