சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ,9,771 கோடியாக சரிவு
கடந்த ஆண்டு நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் குறித்த விவரங்கள் தற்போது வழங்கப்பட்டு உள்ளன.
சுவிஸ் வங்கிகளில் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியர்களின் பணம் இருப்பு சரிந்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
அதன்படி வெறும் 1.04 பில்லியன் சுவிஸ் பிராங் (ரூ,9,771 கோடி) அளவிலான தொகை மட்டுமே தற்போது இந்தியர்களின் கணக்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது கடந்த 2021-ம் ஆண்டு 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்காக இருந்தது. அந்தவகையில் 70 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. இது 4 ஆண்டுகளில் மிகவும் குறைவான தொகை ஆகும்.
(Visited 10 times, 1 visits today)